திங்களூர் சந்திரன் கோவிலில் திருப்பணிகள் தீவிரம்
திங்களூர் சந்திரன் கோவிலில் திருப்பணிகள் தீவிரம் நடந்து வருகிறது.
தஞ்சாவூர்
திருவையாறு:
திருவையாறு அருகே திங்களூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு சந்திரன் மேற்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் குடமுழுக்கு நடத்துவற்காக திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு தருமபுர ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வந்து சாமி தரிசனம் செய்தார். பி்ன்னர் கோவிலில் நடந்து வரும் திருப்பணிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது பணிகள் குறித்து கோவில் நிர்வாக அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து திருப்பழனத்தில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
Related Tags :
Next Story