திருப்பராய்த்துறையில் தீர்த்தவாரி


திருப்பராய்த்துறையில் தீர்த்தவாரி
x

திருப்பராய்த்துறையில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

திருச்சி

திருப்பராய்த்துறையில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

வெள்ளி ரிஷப வாகனம்

திருச்சியை அடுத்த முக்கொம்பு அருகே திருப்பராய்த்துறையில் பிரசித்தி பெற்ற பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேசுவரர் கோவில் உள்ளது. அப்பர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகியோரால் பாடல்பெற்ற இக்கோவிலில் தீர்த்தவாரி என்னும் துலாஸ்தானம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதையொட்டி காலையில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், பிரியாவிடையுடன் சமேதராகவும், மற்றொரு வெள்ளி வாகனத்தில் தனி அம்மன் புறப்பாடாகி எழுந்தருளினர். பின்னர் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர்.

புனித நீராட...

கிராம முக்கியஸ்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து குடத்தில் புனித நீர் எடுத்து வந்து கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அஸ்திரதேவருக்கு அபிஷேகம், ஆராதனை செய்தனர். தீர்த்தவாரியின் போது புனித நீராடினால் துன்பம் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம். ஆனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் அருகே விநாயகர் கோவில் பகுதியில் உள்ள வாய்க்கால் படித்துறையில் நீராடினர்.

அஸ்திர தேவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தத்தை மீண்டும் குடத்தில் எடுத்துக் கொண்டு காவிரி ஆற்றுக்கு வந்து காவிரி ஆற்றில் செல்லக்கூடிய தண்ணீரில் கலந்து விட்டனர். பின்னர் குடத்தில் கொண்டுவரப்பட்ட தண்ணீரை தடுப்பு கட்டை பகுதியில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது தெளித்தனர். இதனால் அங்கு நின்ற பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முன்னதாக அம்மன் சப்பரத்தில் பவனி வந்தார். இதற்கான ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் செல்வராஜ் மேற்பார்வையில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், திருப்பராய்த்துறை கோவில் செயல் அலுவலர் ராகினி, ஊராட்சி மன்ற தலைவர் பிரகாசமூர்த்தி ஆகியோர் செய்து இருந்தனர்.

பாக்ஸ்


Next Story