திருப்பரங்குன்றம் கண்மாயில் காயத்துடன் அரியவகை பறவை மீட்பு


திருப்பரங்குன்றம் கண்மாயில் காயத்துடன் அரியவகை பறவை மீட்கப்பட்டது

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் ஓரளவுக்கு தண்ணீர் இருந்து வருகிறது. இந்த நிலையில் உள்ளூர் பறவைகள், கொக்குகள் மற்றும் வெளிநாட்டைசேர்ந்த அரிய வகை பறவைகள் இரை தேடி வருகின்றன. ஆண்டுதோறும் கண்மாயில் தண்ணீர் இருக்கும் பட்சத்தில் மீனை இரையாக உட்கொள்வதற்காக வெள்ளை அரிவாள் மூக்கன் என்னும் அரியவகை பறவை வந்து சென்று வருவதை பறவை ஆர்வலர்கள் பார்த்து வியந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரை தேடி வந்த வெள்ளை அரிவாள் மூக்கன் பறவை தண்ணீரில் நீந்த முடியாமல் தத்தளித்தது. அதை கண்டவர்கள் திருப்பரங்குன்றம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தீயணைப்பு வீரா்கள் அந்த பறவையை மீட்டனர். அப்போது பறவையின் கால்கள் மற்றும் இறக்கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பறவைக்கு திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த பறவை வனச்சரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.


Next Story