திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ரூ.52 லட்சம் உண்டியல் காணிக்கை


திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ரூ.52 லட்சம் உண்டியல் காணிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2023 2:25 AM IST (Updated: 9 Jun 2023 7:58 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ரூ.52 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது.

மதுரை

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ரூ.52 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்தது.

ரூ.52 லட்சம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 35 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. அந்த உண்டியல்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் ரொக்கமாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.இந்த வகையில் உண்டியல்கள் யாவும் நிரம்பியதும் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான உண்டியல்கள் திறப்பு நேற்று கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ், முன்னிலையில் நடைபெற்றது. உண்டியலில் ரொக்க பணமாக ரூ.52 லட்சத்து 7 ஆயிரத்து 983 இருந்தது. மேலும் 223 கிராம் தங்கமும், 2 கிலோ 780 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

கலந்து கொண்டவர்கள்

உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் கள்ளழகர் கோவில் துணை கமிஷனர் ராமசாமி, தக்கார் பிரதிநிதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கண்காணிப்பாளர் ஆறுமுகம், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வர் இளவரசி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்துறை கண்காணிப்பாளர்கள் அ.சுமதி, ஜெ.சத்தியசீலன், அலுவலக சூப்பிரண்டு ரஞ்சனி, மற்றும் ஸ்ரீஸ்கந்தகுரு வித்யாலயா வேத பாடசாலை மாணவர்கள், பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். கடந்த மாத உண்டியலில் 45 லட்சத்து 99 ஆயிரத்து 636 ரூபாய் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தை விட சுமார் ரூ.6 லட்சம் ஒரு கிலோ வெள்ளி கூடுதலாகவும், கிடைத்துள்ளது. அதேசமயம் கடந்த மாதத்தை விட 24 கிராம் தங்கம் எடை குறைவாக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story