சுப்பிரமணியசாமி கோவிலில் திருப்படி விழா
வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில் திருப்படி விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை
வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் 56-ஆம் ஆண்டு திருப்படி திருவிழா நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை மகாகணபதி, மழையப்பசாமி, சண்முகநாதர், மூலவரான சுப்பிரமணியர் ஆகிய சாமிகளுக்கு சந்தன காப்பு அபிஷேகம், வள்ளியம்மைக்கு மஞ்சள் காப்பு அபிஷேகம், ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்புடன் வடமாலை சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து நேற்று காலை 8 மணியளவில் பால்குட புறப்பாடு நடைபெற்றது. பின்னர் 11 மணி அளவில் அடியாருக்கு அமுது படைத்தல் நிகழ்ச்சியுடன் மாலை 4 மணி அளவில் கிரிவலம் நடைபெற்றது.
இதில் பக்தர்கள் 251 பால் குடங்களுடன் ஊர்வலமாக சென்று படி பூஜை செய்து, மலையப்ப சாமியை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story