ரெயிலில் குட்கா கடத்தி வந்த திருப்பதி வாலிபர் கைது
ரெயிலில் குட்கா கடத்தி வந்த திருப்பதிவாலிபரை ேஜாலார்பேட்டை போலீசார் கைது செய்தனர். அதேபோல் ஜார்கண்டிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 2 ஒடிசா வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர்.
ரெயிலில் குட்கா கடத்தி வந்த திருப்பதிவாலிபரை ேஜாலார்பேட்டை போலீசார் கைது செய்தனர். அதேபோல் ஜார்கண்டிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 2 ஒடிசா வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர்.
ரெயிலில் சோதனை
திருப்பதியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர்வரை செல்லும் ெரயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அந்த ரெயிலில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் போலீசார் ஏறி சோதனை நடத்தினர். ரெயிலின் கடைசி பகுதியில் உள்ள பொது பெட்டியில் சோதனை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசிய வாலிபரை பிடித்தனர்.
அவர் வைத்திருந்த பையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 8 கிலோ குட்கா இருந்ததை கைப்பற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை செய்ததில் ஆந்திர மாநிலம் திருப்பதி மாருதி நகர் மசூதி தெருவைச் சேர்ந்த நாராயண செட்டி மகன் கிஷோர் (வயது 43) என தெரிவித்தார். இதனையடுத்து கிஷோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 8 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
கஞ்சா பறிமுதல்
இதேபோல் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழை வரை செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை காட்பாடி வழியாக ஜோலார்பேட்டை ேநாக்கி வந்து கொண்டிருந்தது.
அந்த ரெயிலில் எஸ் 3 பெட்டியில் சோதனை செய்தபோது 2 வாலிபர்கள் டிக்கெட் எடுக்காமல் ஜார்கண்ட் மாநிலம் பலாஸ்கீர் ரெயில் நிலையத்திலிருந்து வந்ததும் திருப்பூர் வரை செல்ல இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது உடமைகளை சோதனை செய்யும் போது 2 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததை பறிமுதல் செய்தனர்.
அதில் அவர்கள் ஒடிசா மாநிலம், கோதாதர் அருகே கர்ட்டாஸ் பகுதியை சேர்ந்தவர்களான பிராஜ் தீப் என்பவரின் மகன் புலுடீப் ( 26) மற்றும் பபிஜார் மகன் அனாதிகருட் (31) என்பதும், திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு செல்வதும் தெரியவந்தது. இதனையடுத்து ஜோலார்பேட்டை ரெயில்ேவ போலீசார் இருவரையும் ைகது செய்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.