திருப்பத்தூர் கிளைச்சிறை 1½ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறப்பு


திருப்பத்தூர் கிளைச்சிறை 1½ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறப்பு
x

திருப்பத்தூரில் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த கிளைச் சிறை 1½ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த கிளைச் சிறை 1½ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

கிளைச்சிறை

திருப்பத்தூர் தாலூகா அலுவலக வளாகத்தில் கிளைச் சிறைச்சாலை உள்ளது. குற்ற செயலில் ஈடுபடுவோர் இங்கு அடைக்கப்படுகின்றனர். இந்த சிறைச்சாலையில் 74 பேர் வரை அடைக்கும் வசதி உள்ளது. இந்த சிறைச்சாலை பராமரிப்பு பணிக்காக கடந்த 25.11.2021 அன்று மூடப்பட்டது.

இதனால் திருப்பத்தூர் பகுதியில் குற்றச்செயலில் ஈடுபட்டு கைது செய்யப்படும் குற்றவாளிகள் வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டு வந்தனர்.

திறக்கப்பட்டது

திருப்பத்தூர் கிளைச்சிறை மூடப்பட்டதன் காரணமாக சிறையில் இருப்பவர்களின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவர்களை பார்ப்பதற்கு மிகவும் சிரமடைந்தனர். எனவே, திருப்பத்தூர் கிளை சிறைச்சாலையை உடனே திறக்கும்படி சிறைத்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை விடப்பட்டன.

அதைத்தொடர்ந்து சிறை பராமரிப்பு பணிகள் விரைவாக முடிக்கப்பட்டது. இந்தநிலையில், சிறைச்சாலை தலைவர் சுனில்குமார் சிங் உத்தரவின்பேரில், நேற்று திருப்பத்தூர் கிளைச் சிறை கண்காணிப்பாளர் எஸ்.எம்.சையத் அமீர் தலைமையில் திருப்பத்தூர் கிளைச்சிறை 1½ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.


Next Story