திருப்பத்தூர் மாவட்டம் 91.13 சதவீதம் தேர்ச்சி


திருப்பத்தூர் மாவட்டம் 91.13 சதவீதம் தேர்ச்சி
x

பிளஸ்-2 பொதுத் தேர்வில் திருப்பத்தூர் மாவட்டம் 91.13 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

திருப்பத்தூர்

91.13 சதவீதம் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் மாவட்ட பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

இதில் மாவட்டத்தில் 6,423 மாணவர்கள், 6,591 மாணவிகள் என மொத்தம் 13,014 பேர் தேர்வு எழுதியிருந்தனர். அவர்களில் 5,576 மாணவர்கள், 6,284 மாணவிகள் என மொத்தம் 11,860 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.13 சதவீதம் ஆகும்.

29-வது இடத்துக்கு...

மேலும் தமிழக அளவில் கடந்த ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம், 34-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 29-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. அரசுப் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தை கணக்கிடும் போது, திருப்பத்தூர் மாவட்டம் 27-வது இடத்தை பிடித்துள்ளது.

இது குறித்து கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கூறுகையில், மாவட்டத்தில் 55 அரசுப் பள்ளிகள் 78 தனியார் பள்ளிகள் என மொத்தம் 133 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர். இதில் 45 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

துவண்டுவிடக்கூடாது

அதே போல தோல்வியடைந்த மாணவர்கள், அடுத்த முயற்சிக்கு செல்ல வேண்டும். ஏனெனில் இந்த உலகில் தோல்வியடைந்தவர்கள்தான் சரித்திரம் படைத்துள்ளனர். அதனால் யாரும் துவண்டு விடக் கூடாது. கடந்த முறை செய்த முயற்சியை விட சற்று அதிகமாக முயற்சித்தால், வெற்றி நம் கைகளில் இருக்கும். தேர்வு முடிவுகளை வைத்து, எந்தெந்தப் பள்ளிகளில் அதிகம் பேர் தேர்ச்சியடைய வில்லை என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அங்கு காணப்படும் குறைகள் களையப்படும்.

அந்தப் பள்ளிகளின் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story