திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. ஆலோசனை கூட்டம்


திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. ஆலோசனை கூட்டம்
x

திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார்.

ஜோலார்பேட்டையை அடுத்த பால்னாங்குப்பம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வேலூ‌ர் மேற்கு மாவட்ட பொறுப்பாளரான க.தேவராஜி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன் வரவேற்றார். சி.என். அண்ணாதுரை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களான எ.நல்லதம்பி, ஏ.சி.வில்வநாதன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ம.முத்தமிழ் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கழக தேர்தல் பணிகள் குறித்தும், பல்வேறு ஆக்கப்பணிகள் குறித்தும் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர்.சூர்யகுமார், நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன், ம.அன்பழகன், எஸ்.சாரதிகுமார், ஒன்றிய செயலாளர்கள், எஸ்.கே.சதீஷ்குமார், கவிதா தண்டபாணி, உமா கன்ரங்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வி.வடிவேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர். தசரதன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே. பிரபாகரன் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் பிற அணிகளின் அமைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Next Story