திருத்துறைப்பூண்டி வளவனார் வாய்க்காலில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி


திருத்துறைப்பூண்டி வளவனார் வாய்க்காலில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி
x

திருத்துறைப்பூண்டி வளவனார் வாய்க்காலில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி

திருவாரூர்

தினத்தந்்தி செய்தி எதிரொலியாக திருத்துறைப்பூண்டி வளவனார் வாய்க்காலில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

வளவனார் வடிகால்

டெல்டா மாவட்டங்களில் திருத்துறைப்பூண்டி பகுதி மிகவும் பின்தங்கி உள்ளது. இந்த பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு குறுவை, தாளடி, சம்பா என முப்போக சாகுபடி செய்த விவசாயிகள் பருவநிலை மாற்றத்தாலும், உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்காததாலும் ஒருபோக சாகுபடியே செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு விவசாய பணிகள் நடைபெற்றாலும் கடும் மழையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திருத்துறைப்பூண்டியில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனங்கள் பெறும் வகையில் திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு வரை வளவனார் வடிகால் வாய்க்கால் உள்ளது.

கோரிக்கை

மழைக்காலங்களில் தங்கள் வயல்களில் கூடுதலாக தேங்கும் நீரை வடிய வைக்க இந்த ஆறு பயன்படும். மேலும் வெள்ளம் ஏற்படும் போது இந்த ஆறு வழியாக தான் தண்ணீர் கடலில் கலக்கும். இந்த வளவனார் வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு ஆகாயத்தாமரைகள் புதர் மண்டி கிடந்தது. இதனால் மழைக்காலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் அபாயம் இருந்தது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் வளவனார் வாய்க்காலில் புதர்மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்றி கரைகளை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகற்றும் பணி

இதுகுறித்து செய்தி நேற்று 'தினத்தந்தி'யில் படத்துடன் பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மதியழகன் உள்ளிட்ட அதிகாரிகள் வளவனார் வாய்க்காலில் புதர்மண்டி உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இ்தையடு்த்து வளவனார் வாய்க்காலில் பொக்லின் எந்திரம் மூலம் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் மற்றும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்பழகன் ஆகியோருக்கும் அந்த பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.


Related Tags :
Next Story