திருவண்ணாமலை வட்ட அளவில் பெண்களுக்கான தடகள போட்டி


திருவண்ணாமலை வட்ட அளவில் பெண்களுக்கான தடகள போட்டி
x

திருவண்ணாமலை வட்ட அளவில் பெண்களுக்கான தடகள போட்டி நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை வட்ட அளவில் பெண்களுக்கான தடகள போட்டி நடந்தது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரதியார் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை வட்ட அளவிலான பெண்களுக்கான தடகள போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 600 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர், 3000 மீட்டர் ஓட்ட பந்தயங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

14 வயது, 17 வயது, 19 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதனை மாவட்ட கைப்பந்து சங்கத் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.பிரவீன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன், வி.டி.எஸ்.ஜெயின் பள்ளி நிர்வாக உறுப்பினர் ஆசிஸ், சின்னகாங்கேயனூர் அரசு நிதிஉதவி பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு உடனுக்குடன் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.


Next Story