திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு


திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு
x

திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

திருச்சி

லால்குடி,ஆக.17-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுகனூர் போலீஸ் சரகம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கரியமாணிக்கம் பிரிவு சாலையில், கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில், துறையூர் செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்த சுடர்மணி இறந்தார். அப்போது, சிறுகனூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த பாலசந்திரன், இந்த விபத்து வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தார். தற்போது அவர் பதவி உயர்வு பெற்று திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார். இந்த வழக்கு விசாரணை லால்குடி குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கில் ஆஜராகுமாறு விசாரணை அதிகாரியான பாலசந்திரனுக்கு 21 முறை கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் ஆஜராக வில்லை. இதேபோல் நேற்றும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. ஆனால் பாலசந்திரன் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து லால்குடி குற்றவியல் நீதிபதி ராஜ்குமார் (பொறுப்பு) உத்தரவிட்டார்.


Next Story