திருவாரூர்-பட்டுக்கோட்டை- காரைக்குடி ரெயில் பாதையைரூ.143.07 கோடியில் மின்மயமாக்கும் பணிக்கு ஒப்புதல்


திருவாரூர்-பட்டுக்கோட்டை- காரைக்குடி ரெயில் பாதையைரூ.143.07 கோடியில் மின்மயமாக்கும் பணிக்கு ஒப்புதல்
x

திருவாரூர்-பட்டுக்கோட்டை- காரைக்குடி ரெயில் பாதையை ரூ.143.07 கோடியில் மின்மயமாக்கும் பணி மேற்கொள்ள ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்

திருவாரூர்-பட்டுக்கோட்டை- காரைக்குடி ரெயில் பாதையை ரூ.143.07 கோடியில் மின்மயமாக்கும் பணி மேற்கொள்ள ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மின்மயமாக்கல்

திருவாரூர்-பட்டுக்கோட்டை- காரைக்குடி இடையேயான ரெயில் பாதை மீட்டர் கேஜ் பாதையாக இருந்தது. இந்த ரெயில் பாதை கடந்த 2019-ம் ஆண்டு அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. தற்சமயம் இந்த ரெயில் தடத்தில் தாம்பரம்- செங்கோட்டை அதிவிரைவு ரெயில் வாரம் 3 முறையும், செகந்திராபாத்-ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரெயில், எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரெயில் வாரம் ஒரு முறையும், திருவாரூர்-காரைக்குடி பயணிகள் ரெயில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் பாதை மின்மயமாக்கப்படாத காரணத்தினால் சென்னையில் இருந்து வருகிற விரைவு ரெயில்களுக்கு திருவாரூரில் இருந்து என்ஜின் மாற்றப்பட வேண்டி உள்ளது. இதனால் பயண நேரம் அதிகமாகிறது. டீசல் உபயோகத்தால் சுற்றுச்சூழலும் மாசுபட்டு வருகிறது. இதனால் 149 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி ரெயில் பாதையை விரைந்து மின்மயமாக்க வேண்டும் என ரெயில் பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ரெயில்வே வாரியம் ஒப்புதல்

திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் வழியாக செல்லும் திருவாரூர்-பட்டுக்கோட்டை- காரைக்குடி ரெயில் பாதையை தற்போது ரெயில்வே வாரியம் ரூ.143 கோடியே 7 லட்சம் செலவில் மின்மயமாக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ரெயில் தடம் மின்மயமாக்கப்படும் என்ற அறிவிப்பு பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ரெயில் பயணிகள், வர்த்தகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நின்று செல்ல வாய்ப்பு

பாதையை மின்மயமாக்கினால் தாம்பரம்- செங்கோட்டை அதிவிரைவு ரெயில் போன்ற ரெயில்கள் அதிராம்பட்டினம், பேராவூரணி போன்ற ஊர்களில் நின்று செல்லவும் வாய்ப்பு உள்ளது. எரிபொருள் சிக்கனம் ஏற்படும். ரெயில்வேக்கு வருமானம் அதிகமாகும். இந்த ரெயில் தடத்தை மின் மயமாக்க ஒப்புதல் அளித்த ரெயில்வே வாரிய தலைவர், மின்துறை இயக்குனர், தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் வ.விவேகானந்தன் ஆகியோர் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளனர்.


Next Story