திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி
செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டை இலத்தூர் ரோட்டில் அமைந்துள்ள நித்யகல்யாணி அம்மன் கோவிலில்நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்ே்ததி தொடங்கியது. இதையொட்டி கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டன. மேலும் அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஆரூத்ரா திருவாசக கமிட்டி சார்பில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடந்தது. திருவாசக கமிட்டி தலைவா் தங்கையா தலைமை தாங்கினார். துணைச்செயலாளா் முருகன், கமிட்டி உறுப்பினா் பி.பி.எம்.சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா். செயலாளா் ராம்நாத் அனைவரையும் வரவேற்று பேசினார். பிரேமா தலைமையிலான குழுவினா் திருவாசகம் முற்றோதுதல் நடத்தினர். முன்னதாக நித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் கமிட்டி உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.