ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் உண்மை நிலை தெரிய வந்துள்ளது- ஈரோட்டில் ஜி.கே.வாசன் பேட்டி


ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் உண்மை நிலை தெரிய வந்துள்ளது- ஈரோட்டில் ஜி.கே.வாசன் பேட்டி
x

ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் உண்மை நிலை தெரிய வந்துள்ளது- ஈரோட்டில் ஜி.கே.வாசன் பேட்டி

ஈரோடு

ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் உண்மை நிலை தெரிய வந்துள்ளது என்று ஈரோட்டில் ஜி.கே.வாசன் கூறினார்.

ஆய்வு

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே வெள்ளம் பாதித்த பகுதிகளை நேற்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அவர் ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில், கட்சி நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த மக்களுக்கு தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். ஈரோட்டில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு பெய்த மழை காரணமாக ஒருவர் இறந்ததாக தகவல் வந்துள்ளது. நாங்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினோம். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அரசு வழங்க வேண்டும்.

ராசி மணல்

தமிழகம் முழுவதும் ஆறுகளை தூர்வாரும் ஆக்கப்பூர்வமான பணிகளை உடனே தொடங்க வேண்டும். காமராஜர் ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது கிடப்பில் உள்ள ராசி மணல் நீர்த்தேக்க திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அரசுக்கு எதிராக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எதிர்க்கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இதன் காரணமாக ஏற்பட்ட அச்சத்தால் அரசு எதிர்க்கட்சியை முடக்க நினைத்து வழக்குகளை போட்டு வருகிறது. இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். எல்லா மாநிலங்களிலும் அவர்களது தாய்மொழி அவர்களுக்கு முக்கியம் தான். இந்தியாவில் இணைப்பு மொழியாக ஆங்கிலம் தான் உள்ளது. 3-வது மொழியை யார் வேண்டுமானாலும் எந்த மொழியையும் கற்கலாம். இதில் கட்டுப்பாடு கிடையாது.

துப்பாக்கி சூடு சம்பவம்

இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இது தொடரக்கூடாது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் போலீஸ்துறை அதிகாரிகள் யார் யார்? சரிவர செயல்படவில்லை என்பதை வெளிப்படுத்துவதற்காக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது இந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் உண்மை நிலை தெரிய வந்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் பொதுமக்களுக்கு எந்த ஒரு தெளிவும் ஏற்படவில்லை. மாறாக நடுநிலையாளர்கள் இந்த அறிக்கையை சரி என்றும். தவறும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் விடியல் சேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜா, துணைத்தலைவர் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story