தமிழகத்தில் மேலும் 401 பேருக்கு கொரோனா


தமிழகத்தில்  மேலும் 401 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 April 2023 9:04 PM IST (Updated: 11 April 2023 9:50 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 401- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று ஒரே நாளில் 401 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 215 பேர், பெண்கள் 186 பேர் அடங்குவர். சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

சென்னையில் அதிகபட்சமாக 110 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 46 பேரும், கோவையில் 41 பேரும், சேலம் 23 பேரும், கன்னியாகுமரி 22 பேரும் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 198 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 301 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று தொற்று பாதிப்பு இல்லை. நேற்று செங்கல்பட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.


Related Tags :
Next Story