தமிழ்நாட்டில் மேலும் 3 பேருக்கு கொரோனா


தமிழ்நாட்டில் மேலும் 3 பேருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் 2 ஆண்கள் 1 பெண் உள்பட 3 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, மதுரை ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 36 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் இன்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story