தமிழ்நாட்டில் மேலும் 4 பேருக்கு கொரோனா
தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சை முடிந்த நிலையில் 10 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
சென்னை,
தமிழ்நாட்டில் 2 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 4 பேர் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் அடங்குவர். விமான நிலைய பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
35 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. அதே போன்று எந்த மாவட்டத்திலும் கொரோனா உயிரிழப்பு நிகழவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 55 பேர் உள்ளனர். இதுதவிர தமிழகம் முழுவதும் கொரோனா சிகிச்சை முடிந்த நிலையில் 10 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதில் சென்னையில் 2 பேர் அடங்குவார்கள். இன்னும் 40 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசின் பொது சுகாதார இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.