தமிழகத்தில் மேலும் 1,624- பேருக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் மேலும் 1,624- பேருக்கு கொரோனா தொற்று
x

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,846-ல் இருந்து 1,624- ஆக குறைந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் மேலும் 1,624- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 032- ஆக உள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு 409-ல் இருந்து 353 ஆக குறைந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 171-பேருக்கும், கோவை மாவட்டத்தில் 159- பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 62- பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14,714-ல் இருந்து 13,510- ஆக குறைந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2004- ஆகும்.


Next Story