தமிழ்நாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா- சுகாதாரத்துறை தகவல்


தமிழ்நாட்டில்  மேலும் 274 பேருக்கு கொரோனா-  சுகாதாரத்துறை தகவல்
x
தினத்தந்தி 1 May 2023 9:14 PM IST (Updated: 1 May 2023 9:16 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 274 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 144 ஆண்கள் மற்றும் 130 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக சென்னையில் 49 பேருக்கும், கோவையில் 35 பேருக்கும், சேலத்தில் 23 பேருக்கும் மொத்தம் 34 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 490 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 498 ஆக உள்ளது. இன்று தமிழ் நாட்டில் கொரோனா தொற்றால் ஈரோட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story