தமிழகத்தில் மேலும் 119 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று 119- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று 119 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 30 பேர் உள்பட 30 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 10-க்கும் மேல் பதிவாகியுள்ளது.
மருத்துவமனையில் 224 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 1,139 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story