தமிழகத்தில் மேலும் 292 - பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 292- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு விவரம் பற்றிய தகவல்களை மருத்துவத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 292 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 72 பேர், செங்கல்பட்டில் 24 பேர் உள்பட 33 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
மருத்துவமனையில் 280 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 223 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.