தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாநில உளவுத்துறை உறக்கநிலையில் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு,மாநில உளவுத்துறை உறக்கநிலையில் உள்ளது.தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது.
மங்களூரு குண்டுவெடிப்பு விசாரணையில், ஷாரிக் போலி அடையாள அட்டைகளை காட்டி கோவையில் தங்கியிருந்தது தெரியவந்தது.
கோட்டை ஈஸ்வரன் குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத செயல் என்று முதல் நாளிலிருந்து தமிழக பாஜக வலியுறுத்தியது.
ஷாரிக் கோவையில் தங்கியிருந்தது, தண்டனையின்றி செயல்படும் தமிழ்நாடு பயங்கரவாதிகளுடன் அவருக்கு உள்ள தொடர்பு குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது ஆனால் அதை தமிழ்நாடு அரசு மறுக்கிறது என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story