டி.என்.பாளையம் பகுதிகளில் 2-ம் போக நெல் நடவு பணி தீவிரம்


டி.என்.பாளையம் பகுதிகளில்   2-ம் போக நெல் நடவு பணி தீவிரம்
x

டி.என்.பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2-ம் போக நெல் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு

டி.என்.பாளையம்

டி.என்.பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2-ம் போக நெல் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

4 ஆயிரம் ஏக்கர்

டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தற்போது 2-ம் போகத்துக்காக அரக்கன் கோட்டை வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுடைய வயல்களில் நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல் சாகுபடி பணி தீவிரம்

இதன்காரணமாக டி.என்.பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வயல்களில் நெல் நாற்று நடவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அந்த பகுதிைய சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'முதல் போக நெல் சாகுபடி தமிழ் மாதமான கடந்த சித்திரை மாதம் தொடங்கி புரட்டாசி மாதம் அறுவடை பணியோடு முடிவடைந்தது. 2-ம் போக நெல் சாகுபடி பணியானது கடந்த ஐப்பசி தொடங்கியது. வருகிற தை மாதம் நெல் அறுவடைக்கு வந்து விடும். மேலும் முதல் போகத்தில் நெல் விளைச்சல் அதிகரித்து காணப்பட்டது. இனி பனி காலம் என்பதால் 2-ம் போகத்தில் நெல் விளைச்சல் சற்று குறைவாக இருக்கும்,' என்றனர்.


Next Story