டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 6,288 பேர் எழுதினர்


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 6,288 பேர் எழுதினர்
x

நெல்லை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 6,288 பேர் எழுதினர்.

திருநெல்வேலி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான அதிகாரிகளை தேர்வு செய்யும் குரூப்-1 நேற்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் இதற்காக 36 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில் பங்கேற்று எழுதுவதற்கு 10 ஆயிரத்து 698 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களில் 6,288 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். 4,410 பேர் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம் 59 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவுப்படி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா மேற்பார்வையில் அதிகாரிகள் கண்காணித்தனர்.


Related Tags :
Next Story