டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது

கடலூர்

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

குரூப்-1 முதல்நிலை தேர்வு

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு, கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடத்தப்பட உள்ளது. மாதிரி தேர்வு எழுத உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு முன்கூட்டியே வருகை தர வேண்டும்.

மாதிரி தேர்வு

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை 04142- 290039 மற்றும் 94990 55908 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். எனவே இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கு தயாராகிவரும் இளைஞர்கள் தங்களது தேர்வின் 'ஹால் டிக்கெட்" நகலுடன் மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story