டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
x

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 860 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளில், 5 ஆயிரத்து 413 பணியிடங்கள் இருந்தன. இதற்கான, முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை எழுத்து தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளன.

இந்நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 860 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விவரங்களை www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Next Story