அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்


அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி  மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
x

தேனியில் அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரி மாணவர்-இளைஞர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தேனி

தேனி பழைய பஸ் நிலையம் முன்பு மாணவர் அமைப்பு மற்றும் இளைஞர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் பிளாக், புரட்சிகர இளைஞர்கழகம் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் தமிழ்பெருமாள் தலைமை தாங்கினார். இதில், மாணவர் அமைப்பு மற்றும் இளைஞர் அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு அக்னிபத் திட்டத்தை கைவிடக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story