திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு


திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு  பக்தர்கள் வருகை அதிகரிப்பு
x

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

பக்தர்கள் வருகை

108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 6-ந்தேதி நடந்தது. அதன்பின்னர் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதன்படி நேற்று கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்து இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் சாமிகும்பிட வருகின்றனர்.

பூஜைகள், பஞ்சவாத்தியம், நாதஸ்வரம், தவில் இல்லாமல் நடக்கிறது. எனவே இசைக்கலைஞர்களை உடனே நியமிக்க அறநிலையத்துறை முன்வரவேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story