தங்கு கடல் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்


தங்கு கடல் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்
x

தங்கு கடல் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்

தஞ்சை மாவட்டத்தில் தங்கு கடல் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று மீனவர் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் மல்லிப்பட்டினத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்மாநில மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட விசைப்படகு சங்க தலைவர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார். செயலாளர் வடுகநாதன் மற்றும் நிர்வாகிகள் செல்வக்கிளி, முத்து, இப்ராஹிம், சர்புதீன், .சேக் அப்துல்லா, இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தங்கு கடல் மீன்பிடிக்க அனுமதி

டீசல் விலை உயர்வால் மீனவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இலங்கை கடல் எல்லை மிக அருகில் இருப்பதாலும், அரசின் சட்ட விதிகளின்படி ஐந்து நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் தான் மீன்பிடிக்க வேண்டும் என்ற விதிப்படியும், தொழில் செய்வதால் அதிகப்படியான டீசல் செலவு ஏற்படுகிறது.

மீன்பிடிப்பு பகுதி குறைவான இடங்களே இருப்பதால், பிடிபடும் மீன்களும் குறைவாக வருவதாலும், தொடர்ந்து தொழில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு மாற்று ஏற்பாடாக தங்கு கடல் மீன்பிடித்தலுக்கு ஏற்பாடு செய்தால் மீனவர்கள் நஷ்டத்தில் இருந்து தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும். எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் தங்குகடல் மீன் பிடிப்புக்கு அனுமதி வழங்குவது போல் 3 முதல் 5 நாட்கள் சர்வதேச கடல் பகுதியான தூரக் கடல் சென்று மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்.

ஒப்பந்தத்தை மீறி தொழில்

பாக் ஜலசந்தி பகுதியில் 42 ஆண்டுகளுக்கு முன்பு விசைப்படகு, நாட்டு படகு மீனவர்கள் இருவரும் பிரச்சினை இன்றி தொழில் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி ஞாயிறு, செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாட்கள் நாட்டுப்படகுகள் கடலுக்குச் சென்று தொழில் புரிந்து மறுநாள் கரை திரும்ப வேண்டும்.விசைப்படகுகள் சனி, திங்கள், புதன் தொழிலுக்கு சென்று மறுநாள் கரை திரும்ப வேண்டும். இந்த ஒப்பந்தப்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை விதிப்படி தொழில் புரிந்தனர். தற்போது நாட்டுப்படகு மீனவர்கள் சிலர் ஒப்பந்தத்தை மீறி எல்லா நாட்களிலும் தொழிலுக்கு சென்று வருவதால் விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே தற்போது உள்ள சூழ்நிலையை கணக்கில் கொண்டு தங்கு கடல் மீன் பிடிக்கும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு மீனவர்களுக்கான டீசல் அளவை உயர்த்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காலவரையற்ற வேலைநிறுத்தம்

இந்த ேகாரிக்கைகளை வலியுறுத்தி 7-ந் தேதி(நேற்று) காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என விசைப்படகு மீனவர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்த போராட்டம் அறிப்பை தொடர்ந்து நாகப்பட்டினம் மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்பருதி, தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சிவகுமார் ஆகியோர் விசைப்படகு மீனவர்களிடம் ேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு மாத காலத்தில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்று மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Next Story