தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க ஊட்டி- குந்தா சாலையோர கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரம்
தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கஊட்டி- குந்தா சாலையோர கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஊட்டி
தென்மேற்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கஊட்டி- குந்தா சாலையோர கால்வாயில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர் மழை பெய்கிறது.
இதனால் கூடலூரில் 12 வீடுகள் இடிந்து விழுந்து உள்ளது. இதனால் தென் மேற்கு பருவ மழை காரணமாக கூடலூர், ஊட்டி, குந்தா பந்தலூர் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க மாட்ட நிருவாகம் சார்பில் நெடுஞ்சாலை, வனத்துறை வருவாய் துறை உள்ளாச்சி துறை சார்பில் பல வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பணிகள் தீவிரம்
இதில் நெடுஞ்சாலை துறை சார்பில் மாபெரும் மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்கள் தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஊட்டி-குந்தா சாலையோரங்களில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்ட சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதில் நெடுஞ்சாலைத் துறை, கட்டுமானம் மறறும் பராமரிப்பு, அதிகாரிகள் குந்தா பகுதியின் மூலம் மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள், சிறு பாலங்கள், சிறு குழாய் வடிகால்கள் சாலை ஓரங்களில் உள்ள செடி, கொடிகளை அகற்றி தூய்மைப்படுத்துகிறார்கள். மேலும் மண் குவியல்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்தப்பணியை நீலகிரிகோட்டப் பொறியாளர் குழந்தைராஜு, உதவி கோட்டப் பொறியாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.