ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி  தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வலியுறுத்தி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வலியுறுத்தி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் பாண்டியராஜன், மாநில மகளிரணி பொதுச்செயலாளர் ஜீவா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆன்லைன் ரம்மியை தமிழக அரசு தடை செய்ய வலியுறுத்தியும், இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பதை கைவிட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story