கல்குவாரியை தடை செய்யக்கோரி கோபி ஆர்.டி.ஓ.விடம் பொதுமக்கள் மனு


கல்குவாரியை தடை செய்யக்கோரி  கோபி ஆர்.டி.ஓ.விடம் பொதுமக்கள் மனு
x

கல்குவாரியை தடை செய்யக்கோரி கோபி ஆர்.டி.ஓ.விடம் பொதுமக்கள் மனு கொடுத்தனா்.

ஈரோடு

கடத்தூர்

கோபி அருகே உள்ள கோட்டுப்புள்ளாம்பாளையம் கிராம மக்கள் ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினியிடம் ஒரு மனு அளித்தார்கள். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கோட்டுபுள்ளாம்பாளையம் பகுதியில் ஒரு தனியார் கல் குவாரி கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது

இரவு நேரங்களில் வெடி வைத்து தகர்க்கப்படுவதால் பாறைகள் உடைந்து அருகில் உள்ள வீடுகள் மேல் விழுகிறது.

அதிகளவு வெடி மருந்து பயன்படுத்தப்படுவதால் வீடுகள் விரிசல் ஏற்படுகிறது. இதுபற்றி ஈரோடு மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தோம். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் குவாரி செயல்பட தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது குவாரி மீண்டும் திறக்கப்பட்டு பாறைகள் உடைக்கப்படுகிறது. ஜல்லி கற்கள் உடைத்து விற்பனை செய்யப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட கல்குவாரியை மூடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்கள்.

மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story