சத்தியில் புதிதாக கட்டப்பட உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது; கோபி ஆர்.டி.ஓ.விடம் வேண்டுகோள்


சத்தியில் புதிதாக கட்டப்பட உள்ள  நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது;  கோபி ஆர்.டி.ஓ.விடம் வேண்டுகோள்
x

சத்தியில் புதிதாக கட்டப்பட உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்று கோபி ஆர்.டி.ஓ.விடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் போலீஸ் நிலையம் அருகில் பழைய அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதே பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பொதுப்பணி துறையை சேர்ந்த அதிகாரிகள் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட உள்ளஇடத்தை ஆய்வு செய்தார்கள். அதன் பிறகு புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதாரம் கட்டப்பட உள்ள இடம் பவானி ஆற்றின் கரையோரம் இருப்பதால் தற்போதுள்ள சுற்றுச்சுவர் போதிய உறுதியில்லை. ஆகவே அதை உறுதிப்படுத்தி கட்ட வேண்டும். இதற்கு சுமார் ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்று சான்று கூறினார்கள். இது தொடர்பாக கோபி ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி நேரில் ஆய்வு செய்ய வந்திருந்தார்.

அப்போது சத்தி நகராட்சி தலைவர் ஆர்.ஜானகிராமசாமி, துணை தலைவர் நடராஜ், மற்றும் கவுன்சிலர்கள், பொதுமக்கள் ஒன்று கூடி ஆர்.டி.ஓ.விடம், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமிடத்திற்கும் சுற்றுப்புற சுவருக்கும் 20 மீட்டர் தூரம் இடைவெளி உள்ளது. மேலும் பவானி ஆற்றில் அதிக அளவில் சுற்றுச்சுவர் தொடும் அளவிற்கு தண்ணீர் வந்தபோது கூட சுவருக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இது நகரின் மையப் பகுதி. இங்கு நகர்ப்புற சுகாதார நிலையம் அமைத்தால் ஏழை எளியவர்கள் அனைவருக்கும் வசதியாக இருக்கும். ஆகவே வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்றார்கள்.

அதற்கு ஆர்.டி.ஓ. உயர் அதிகாரிகளிடம் உங்கள் கோரிக்கையை கூறி தகுந்த ஏற்பாடுகளை செய்கிறேன் என்றார். அப்போது சத்தியமங்கலம் தாசில்தார் சங்கர் கணேஷ் உடன் இருந்தார்.


Related Tags :
Next Story