வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க மனைவி கோரிக்கை


வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர   நடவடிக்கை எடுக்க மனைவி கோரிக்கை
x

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனைவி கோரிக்கை மனு கொடுத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழசெய்த்தலையை சேர்ந்தவர் அசன் தேவராஜ். இவருடைய மனைவி பேச்சியம்மாள். இவர் நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது கணவர் அசன் தேவராஜ் சவுதி அரேபியாவில் கடந்த 12 ஆண்டுகளாக கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த 30.8.22 அன்று நெஞ்சுவலி காரணமாக எனது கணவர் இறந்து விட்டார். எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 15 நாட்கள் ஆகியும் எனது கணவரின் உடல் வந்து சேரவில்லை. இதனால் நாங்கள் மிகுந்த கவலையில் உள்ளோம். ஆகையால் எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கும், அவருக்கு உரிய பணப்பலன்கள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி உள்ளார்.


Next Story