மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் பா.ம.க. கோரிக்கை


மூங்கில்துறைப்பட்டு  தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்  பா.ம.க. கோரிக்கை
x

மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என பா.ம.க. கோரிக்கை விடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பா.ம.க. துணை செயலாளரும், முன்னாள் ராணுவ வீரருமான ஏ.எஸ்.வாசன் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முக்கியமான பகுதியாக மூங்கில்துறைப்பட்டு விளங்கி வருகிறது. இப்பகுதி மாவட்டத்தின் கடைகோடி எல்லையில் இருப்பதால் மக்களுக்கு தேவையான எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அரசு செய்து கொடுக்கவில்லை. குறிப்பாக இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும். பழையூர் காட்டுக்கொட்டாய் மற்றும் மோட்டூர் பகுதிகளில் சேதமடைந்து கிடந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அகற்றப்பட்டு பல மாதங்கள் ஆகிறது. ஆகவே அதற்கு பதிலாக புதிய குடிநீர் தொட்டிகள் கட்டவேண்டும். கல்வராயன் மலை கிராமங்களில் நடைபெறும் சாராய விற்பனையை தடுக்க புதுப்பட்டு கிராமத்தில் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும். கடுவனூர் பேருந்து நிறுத்தத்தை விரிவாக்கம் செய்து அனைத்து பேருந்துகளும் நின்று செல்வது மட்டுமல்லாமல் சேதமான நிழற் குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலந்தல், காங்கியனூர் உள்ளிட்ட கிராமப்புற மாணவர்கள் நலன்கருதி மேலந்தல் கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி அமைப்பதோடு, சேதமடைந்து கிடக்கும் கிராமப்புற சாலைகளை உடனடியாக சீரமைக்கவேண்டும். இவ்வாறு மேற்கண்ட மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story