கோடை வெயிலை சமாளிக்ககொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கோடை வெயிலை சமாளிக்ககொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

கோடை வெயிலை சமாளிக்க கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஈரோடு

கடத்தூர்

கோடை வெயிலை சமாளிக்க கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கொளுத்தும் வெயில்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று கோபி கொடிவேரி தடுப்பணை. பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் இருந்து அருவிபோல் தண்ணீர் கொட்டுவதால் ஞாயிறு மற்றும் பிற விடுமுறை நாட்களில் வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வந்து செல்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துவதால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

இந்தநிலையில் நேற்று ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வந்திருந்தனர். அருவிபோல் கொட்டும் தண்ணீரில் ஆனந்தமாய் குளித்து கோடை வெயிலை சமாளித்தார்கள்.

மேலும் அங்கு விற்கப்படும் வறுத்த மீன்களை வாங்கி சுவைத்தார்கள். வீடுகளில் இருந்து கொண்டுவந்திருந்த உணவுகளை குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டனர்.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடத்தூர் மற்றும் பங்களாப்புதூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story