கஞ்சா விற்றதை தட்டிக்கேட்டவாலிபரை தாக்கிய 2 பேர் கைது
கஞ்சா விற்றதை தட்டிக்கேட்ட வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்
அன்னதானப்பட்டி,
சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 23). பழைய இரும்புக் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று தனது உறவினரை பார்க்க தாதகாப்பட்டி வழிவாய்க்கால் காளியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு கழிவறை பின்புறம் சிலர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த தமிழரசன், பொது இடத்தில் ஏன் கஞ்சா விற்கிறீர்கள்?, என அவர்களிடம் தட்டிக்கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர்கள் தமிழரசனை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்ததுடன், அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் வேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த ஆனந்த் ராஜ் (23), மணிரத்தினம் என்கிற நொல்லையன் (20) ஆகிய 2 ேபரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story