தனியார் நிறுவன பெண் அதிகாரியிடம்1½ பவுன் சங்கிலி பறிப்பு
மார்த்தாண்டம் அருகே ஸ்கூட்டரில் சென்ற தனியார் நிறுவன பெண் அதிகாரியின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே ஸ்கூட்டரில் சென்ற தனியார் நிறுவன பெண் அதிகாரியின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெண் அதிகாரி
மார்த்தாண்டம் அருகே கோட்டகம் தரிவிளையை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகள் மோனிஷா (வயது 24). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார்.
நேற்று முன் தினம் பணியை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த மோனிஷா இரவு தாயாரின் ஸ்கூட்டரில் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார்.
1½ பவுன் சங்கிலி பறிப்பு
பின்னர் அவர் அங்கிருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டு இரவு 10 மணியளவில் சாங்கை-கோட்டகம் சாலையில் வந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென்று மோனிஷாவின் கழுத்தில் கிடந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டார்.
இதுபற்றி மோனிஷா மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் இளவரசு விசாரணை நடத்தினார். மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.