கொரோனா தொற்றை எதிர்கொள்ளமுன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், நோய்த்தொற்று தயார் நிலை முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
தேனி
தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், நோய்த்தொற்று தயார் நிலை முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் முன்னிலையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கொரோனா பரிசோதனைக்கு மாதிரி சேகரித்தல், புறநோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவில் பரிசோதனை செய்தல், சிகிச்சை அளித்தல், தீவிர சிகிச்சை பிரிவுக்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருத்தல் போன்றவை குறித்து ஒத்திகை நிகழ்த்தப்பட்டது. பின்னர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் மீனாட்சிசுந்தரம், மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரிமளாதேவி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story