கருங்கல்பாளையம் சந்தைக்கு650 மாடுகள் விற்பனைக்கு வந்தது


கருங்கல்பாளையம் சந்தைக்கு650 மாடுகள் விற்பனைக்கு வந்தது
x

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு 650 மாடுகள் விற்பனைக்கு வந்தது.

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு 650 மாடுகள் விற்பனைக்கு வந்தது.

மாட்டுச்சந்தை

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 70 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இவைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை ஆனது.

இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், தேனி, நாமக்கல், கரூர், திருச்சி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் 350 பசுமாடுகள், 300 எருமை மாடுகள் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

90 சதவீதம் விற்பனை

இதில் பசு மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையும், எருமை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. இந்த மாடுகளை வாங்குவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாங்கி சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றார்கள்.

இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது, 'தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பலர் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இன்று (அதாவது நேற்று) கொண்டு வரப்பட்ட மாடுகளில் 90 சதவீதம் விற்பனை ஆகி உள்ளது' என்றனர்


Related Tags :
Next Story