கோவில்பட்டி நகர்நல மையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி


கோவில்பட்டி நகர்நல மையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 21 Sept 2023 12:15 AM IST (Updated: 21 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி நகர்நல மையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி சார்பில் கோவில்பட்டியில் உள்ள நகர் நல மையத்தில் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் கருணாநிதி, யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நகர் நல மையத்திற்கு தேவையான போர்வை, எடை பார்க்கும் எந்திரம், நாற்காலி, ரத்த அழுத்தமானி, நோட்டுப் புத்தகம், கத்தரிக்கோல், சில்வர் ட்ரே, குளுக்கோ மீட்டர் உட்பட 15 வகையான மருத்துவ உபகரணங்களை நகர் நல மையமருத்துவர் ராமமூர்த்தி மற்றும் செவிலியர்களிடம் வழங்கினா். நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் சவுந்தர்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story