கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷியாவில் இருந்து யுரேனியம் வருகை


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷியாவில் இருந்து யுரேனியம் வருகை
x

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷியாவில் இருந்து யுரேனியம் கொண்டு வரப்பட்டது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு, அணு உலைகளில் பயன்படுத்தப்படும் ெசறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் ரஷியாவில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.

அணு உலைகள்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும் 4 அணு உலைகள் கட்டுமான பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

முதல் மற்றும் இரண்டாவது அணு உலைகளில் பயன்படுத்தப்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்களை இந்திய-ரஷிய ஒப்பந்தத்தின்படி ரஷியாவில் இருந்து கூடங்குளம் கொண்டு வரப்படுகிறது.

12 பண்டல்கள்

அதன்படி, ரஷியாவில் இருந்து 12 பண்டல்கள் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருட்கள் தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தது. அங்கிருந்து மூன்று கன்டெய்னர் லாரிகளில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஏற்றப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கூடங்குளத்திற்கு நேற்று அதிகாலையில் வந்தடைந்தது.

அங்கு பாதுகாக்கப்பட்ட பகுதியில் சேமிப்பு கிடங்கில் யுரேனியம் எரிபொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஓரிரு நாட்களில் ரஷியாவில் இருந்து இரண்டு கட்டமாக மேலும் யுரேனியம் எரிபொருட்கள் கொண்டு வரப்பட இருப்பதாக அணுமின் நிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story