தடை விதிக்க சட்டத்தை உருவாக்குவதற்கு முடிவு எடுக்க வேண்டும்


தடை விதிக்க சட்டத்தை உருவாக்குவதற்கு   முடிவு எடுக்க வேண்டும்
x

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க சட்டத்தை உருவாக்குவதற்கு முடிவு எடுக்க வேண்டும் என்று முத்தரசன் கூறினார்.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

ஆன்லைன் சூதாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் கம்யூனிஸ்டு உறுப்பினர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக முதல்-அமைச்சர் தலைமையில் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க சட்டத்தை உருவாக்குவதற்கு முடிவு எடுக்க வேண்டும். முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறப்பு குறித்து மர்மம் இருப்பதாக அ.தி.மு.க.வினர் தான் கூறினர். அவர்கள் தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தனர்.

கடும் நடவடிக்கை

தற்போது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. இந்த அறிக்கை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் உரிய முடிவு எடுத்து உண்மை தன்மையை அ.தி.மு.க. தலைவர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் அரசு விளக்க வேண்டும். கடலூரில் சிறைத்துறை துணை ஜெயிலர் வீடு கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை உரிய விசாரணை செய்து, யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கன்னியாகுமரியில் வரும் 7-ந்தேதி ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் பாதயாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவிப்பதாக கூறினார்.


Next Story