`இந்தியாவை முன்னோடி நாடாக உயர்த்தஇளம்விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு உதவும்'-தென்காசியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் பேட்டி
இந்தியாவை உலகின் முன்னோடி நாடாக மாற்றுவதற்கு இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் உபயோகமாக இருக்கும் என தென்காசியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் விஞ்ஞானி சிவன் கூறினார்.
இந்தியாவை உலகின் முன்னோடி நாடாக மாற்றுவதற்கு இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் உபயோகமாக இருக்கும் என தென்காசியில் இஸ்ரோ முன்னாள் தலைவர் விஞ்ஞானி சிவன் கூறினார்.
விஞ்ஞானி சிவன்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன முன்னாள் தலைவர் விஞ்ஞானி சிவன் நேற்று மாலை தென்காசி வந்திருந்தார். தென்காசியில் உள்ள இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போதைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகத்தின் விஞ்ஞான முன்னேற்றங்கள், ஆராய்ச்சிகள் போன்றவை அவர்களுக்கு நன்றாக தெரிகிறது.
விண்வெளி, ஏவுகணை போன்றவை குறித்து அதிகமாக அவர்களுக்கு தெரிகிறது. தற்போது ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். விண்வெளியில் ஏவுகணை விடுவது, ராக்கெட் விடுவது, செயற்கைக்கோள் அனுப்புவது போன்றவற்றை மத்திய அரசு செய்து கொண்டு இருந்தது.
மனதை கவர்ந்தது
தற்போது புதிய முயற்சியாக அகாடமிக்ஸ் அதாவது தனியார் நிறுவனங்கள் மூலம் அனுப்புவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சிறந்த முறையில் ஆராய்ச்சி செய்து அவர்களை வளர்த்து நல்ல ஒரு நிலைக்கு கொண்டு வந்து இதனை செய்யும் ஒரு செயல்பாடு நடைபெறுகிறது.
இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் கூட ஒரு மாணவன் அறிவியலில் புதிய கண்டுபிடிப்பை காட்டினான். அது உண்மையிலேயே மனதை கவர்ந்தது. இதுபோன்ற இளைஞர்கள் நாட்டிற்கு அதிகமாக தேவை. பிரதமர் மோடி கூறியது போன்று நாட்டை உலகின் முன்னோடி நாடாக மாற்றுவதற்கு இந்த இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியின் நிர்வாக இயக்குனர் இசக்கிதுரை உடன் இருந்தார்.