முயல் வேட்டையாட முயன்றவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


முயல் வேட்டையாட முயன்றவருக்கு  ரூ.10 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 18 Oct 2022 12:15 AM IST (Updated: 18 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே முயல் வேட்டையாட முயன்றவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

தென்காசி

கடையம்:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்டம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மாத்தாளம்பாறை பீட் வெளிமண்டல பகுதியில் மாடக்கண்ணுரார் பகுதியை சேர்ந்த கணேசன் மகன் விஜயபாஸ்கர் (வயது 27) என்பவர் நாய்களை பயன்படுத்தி முயல் வேட்டைக்கு முயன்றது கடையம் வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக அம்பை கோட்ட வனத்துறை துணை இயக்குனர் செண்பகபிரியா உத்தரவுப்படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து கடையம் வனச்சரக அலுவலர் கருணா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடையம் வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் வேட்டையாடுவதோ, வேட்டையாட முயற்சிப்பதோ வனச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம், என்றார்.



Next Story