மாநில கைப்பந்து போட்டியில் பங்கேற்கவிழுப்புரம் மாவட்ட அணி வீரர்களுக்கான தேர்வுநாளை நடக்கிறது
மாநில கைப்பந்து போட்டியில் பங்கேற்க விழுப்புரம் மாவட்ட அணி வீரர்களுக்கான தேர்வு நாளை நடக்கிறது.
விழுப்புரம்
சேலத்தில் வருகிற 12.8.2023 முதல் 15.8.2023 வரை 18 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் விழுப்புரம் மாவட்ட அணி வீரர்களுக்கான தேர்வு நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கைப்பந்து திடலில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் கலந்துகொள்ளும் வீரர்கள் 1.1.2006-க்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதால் ஆதார் அடையாள அட்டை அல்லது வயது நிரூபிக்கும் சான்றிதழை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். இந்த தகவலை மாவட்ட கைப்பந்து சங்கத் தலைவர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story