முல்லைப்பெரியாற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கக்கோரி சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


முல்லைப்பெரியாற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கக்கோரி சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 7:48 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாற்றின் குப்பைகள் கொட்டுவதை தடுக்கக்கோரி சிவசேனா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முல்லைப்பெரியாற்றின் கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் பரிகாரம் செய்வதற்காக கொண்டுவரும் பொருட்கள் மற்றும் பழைய மாலைகள், பூஜை பொருட்களை ஆற்றில் கொட்டி செல்கின்றனர்.

மேலும் கோவிலில் திருமணம் செய்பவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டுவரும் உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு இலைகள், பாலித்தீன் பைகளை வீசி செல்கின்றனர். இதனால் கோவில் முன்பு குப்பை கழிவுகள் குவிந்து சாக்கடை போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் ஆற்றில் கழிவுகள் கொட்டுவதை தடு்க்கக்கோரி சிவசேனா கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Related Tags :
Next Story