தென்னை குரும்பை உதிர்வதை தடுக்க டானிக் விற்பனை


தென்னை குரும்பை உதிர்வதை தடுக்க டானிக் விற்பனை
x

தென்னை குரும்பை உதிர்வதை தடுக்க டானிக் விற்பனை

திருவாரூர்

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தென்னை குரும்பை உதிர்வதை தடுக்க டானிக் விற்பனை செய்யப்படுகிறது என வேளாண் விஞ்ஞானி தெரிவித்தார்.

இதுகுறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்னை இறவை பயிர்

காவிரி டெல்டா மாவட்டங்களில் தென்னை இறவைப்பயிராகவும், மானாவாரி பயிராகவும் பயிரிடப்பட்டு வருகிறது. கஜா மற்றும் புரவி புயல் காரணமாக பல தென்னை மரங்கள் சாய்ந்து அழிந்துவிட்டன. எஞ்சிய மரங்கள் பல இடங்களில் சரியாக பராமரிக்கப்படாமல் குறைந்த மகசூல் கிடைப்பதால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தென்னையில் குரும்பை வைத்தல், குரும்பை அனைத்தும் உதிராமல் காய்களாக மாறவும், திரட்சியான தேங்காய்கள் கிடைக்கவும், ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர்ப்பாசனம் மிகவும் முக்கியமாகும்.

தென்னை டானிக்

இது தவிர குரும்பை உதிராமல் தடுக்க கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பான தென்னை டானிக் என்ற தென்னை மரத்திற்கான பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட தென்னை டானிக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் இந்த தென்னை டானிக் சமீப காலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் தென்னை டானிக் உடன் 4 லிட்டர் நீர் சேர்த்து ஒரு மரத்திற்கு 200 மில்லி வீதம் 25 மரங்களுக்கு வேரில் பாலித்தீன் பையை கொண்டு கட்ட வேண்டும்.

ஒரு லிட்டர் விலை ரூ.309

ஒரு வருடத்திற்கு மேல் உள்ள அனைத்து மரங்களுக்கும் மரத்திலிருந்து 2 அடி தள்ளி மண்ணை தோண்டும்போது கிடைக்கும் இளம் வேர்களில் கத்தியைக்கொண்டு சீவி தென்னை டானிக் பாக்கெட்டை உள்ளே நுழைத்து கட்டி விடவேண்டும். வறட்சியாக இருக்கும் போது ஓரிரு நாட்களில் இந்த மருந்து மரத்தால் உறிஞ்சப்பட்டு பயிர் எடுத்துக் கொள்கிறது. 6 மாதங்களுக்கு ஒருமுறை இதை பயன்படுத்தும் போது தென்னை இலைகள், ஓலைகள் கரும் பச்சை நிறமாக மாறி குரும்பை உதிராமல் வாளிப்பான காய்களை தரமுடியும்.

ஒரு லிட்டர் விலை ரூ.309. ஒரு லிட்டர் வாங்கும் போது 25 மரங்களுக்கு அதனைக்கட்ட முடியும். தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story