காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தை தடுக்கக்கோரி  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமையில் விவசாயிகள் பலர் நேற்று பழனி தாலுகாஅலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமையில் விவசாயிகள் பலர் நேற்று பழனி தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கீரனூர், கல்துறை, பெரிச்சிபாளையம், தாளையூத்து ஆகிய பகுதிகளில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து உள்ளதாகவும், இரவு நேரங்களில் குட்டியுடன் வரும் காட்டுப்பன்றிகள் வேலிகளை சேதப்படுத்தி பயிர்களை நாசம் செய்வதாக கூறி கோஷமிட்டனர்.

மேலும் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தொடர்ந்து கோரிக்கை தொடர்பான மனுவை தாலுகா மற்றும் வனத்துறை அலுவலகத்தில் அளித்தனர்.





Next Story